Home Events Products Practitioners Body Mind Spirit Ask our experts Writers Greetings Old Issues About us
Behind the cosmic curtain Comments

Subject: sithar sky
வாழ்க வையகம் வளர்க வேதாத்திரியம் வாழ்க வளமுடன்..! அறிவுத்திருக்கோயில் ------------------------------------- சீனீவாச நகர் மனவளக்கலை மன்றம் கூடுவாஞ்சேரி மனவளக்கலைமன்ற அறக்கட்டளையின் தவமையம் யோகமும் மனிதமாண்பும் ஆன்மீக கல்வி மையம் *********************************************************************************************** தினசரி தவமையம் காலை 6.00-7.30 மாலை 6.00-7.30 தோற்றம் : 05.01.2004 ஸ்ரீ இரத்தினம்மாள் சின்னத்துரை நாடார் அறக்கட்டளை வளாகம் 8.விவேகாநந்த்ர் தெரு, சீனீவாச நகர், சென்னை 63. Cot Donars 2006-101-30 பி/ஞ. சந்திரா ஜெயராஜ் 2009-C-30 அ/நி. ஜெயராஜ் MA.,FICA.,MA.,YHE அ/நி L.A.S ஜெயராஜ் MA.,FICA.,MA.,YHE காவல் துறை பதிவுபெற்ற ஓய்வு பொறுப்பாசிரியர் அதிகாரி 9841114953, 9710393936 அ/நி. எல்.மோகன சுந்தரி பி.எஸ்சி அ /நி.எஸ்.நந்தகுமார் பி.எஸ்சி ... மூத்த பேராசிரியர் டாக்டர் அ/நி S.லட்சுமணன் அவர்கள், இயக்குனர்,அறிஞர்குழு,அறிவுத்திருக்கோயில் அருட்பெரும்ஜோதி நகர், ஆழியாறு,பொள்ளாச்சி-642 101. 15 16 17 18 1 14 2 13 19 3 12 4 11 5 10 9 8 7 6 அன்புடையீர் வணக்கம் வாழ்க வளமுடன்.. பொருள் : நிகரற்ற மகான் அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களை 19-வது சித்தர் இறை விஞ்ஞானி அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி என அழைத்து கெளரவிப்போம். பார்வை : 1. 05.05.2009 இல் ஆழியாரில் 19-வது சித்தர் என்று எழுதப்பட்ட உருவப்படம். 2. 99-வது பிறந்த நாளில்,19 வது சித்தர், இறை விஞ்ஞானி, வேதாத்திரி மகரிஷி என்றுவான் காந்தத்தில் பதிவு. நமது பாரத நாடு புண்ணிய பூமி ஆயிரமாயிரம் மகான்கள் தோன்றி, வான் காந்தத்தில் உலாவரும் நாடு என்பது சத்தியம். 19-வது நூற்றாண்டில் பாரத திருனாட்டில்,கூடுவாஞ்சேரி, சின்னம்மாள், வரதப்ப முதலியார் தம்பதியருக்கு,8-வது தவப்பிள்ளையாக 14.08.1911.இல் தோன்றியவர், சிறப்பு மிக்க வேதாத்திரி மகரிஷி அவர்கள். வறுமையின் காரணமாக, மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர், திண்னைப் பள்ளிவாயிலாக, தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் புலமை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது. தம்குரு, பாலகிருஷ்ணன் வாயிலாக, பக்தி மார்க்கத்தை உணர்ந்தார். அவருக்கு வைத்தியபூபதி கிருஷ்ணாராவ் ஞானத்தை உபதேசித்தார். ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் குண்டலினி யோகத்தை கற்பித்தார். எனவே, அவரின் 35-வது வயதில் வறுமை, பசி,தெய்வம்,என்ற தனது தேடலுக்கு முழுமையான தெளிவு பெற்றார். (1) விஞ்ஞானம் : விஞ்ஞானம் தோன்றி 300 ஆண்டு காலம் தான் ஆகிறது. நம் விஞ்ஞானத்தின் தந்தை ஐசக் நியூட்டன் ஆவார். 1. ஆப்பிள் பழம் மரத்திலிருந்து விழுவதே புவிஈர்ப்பு விசை என்றார். 2. இறை நிலை, 4 நிலை கொண்டது, என்றும் வெளி சக்தி,பொருள்,காலம் என்றும் குறிப்பிட்டார். (2) நோபல் பரிசு பேற்ற விஞ்ஞானி ஐஸ்டின் அவர்கள் இரை நிலை, 4 நிலை அல்ல, வெளி சக்தி, பொருள் காலம் என்று இரு நிலை என்றும் அது நாணயத்தின் இரு பக்கங்களே என்றும் குறிப்பிட்டார். விஞ்ஞான ரீதியாக விண்வரை கண்ட அவர், விண்ணுக்கு மூலம் இறைத்துகள் என்றும் அறிந்தார். அதற்கு மூலத்தை அறியாத நிலையில் விஞ்ஞானத்தில் தேக்கம். (3) மெய்ஞானம் : மெய்ஞானம், விஞ்ஞானத்தைப் போல் எல்லைக்கு உட்பட்டதல்ல. அது ஏகாந்த நிலை. கி.மு.6000 ஆண்டுளுக்கு முன்பே, மொகஞ்சதரோ, ஹரப்பாவில் வாழ்ந்த, தமிழின மக்கள் தியான நிலையில் சிறந்து விளங்கினர்,என்பதற்கு சான்று உள்ளது. அவர்கள் உணர்ந்த மெய்யறிவை குரு சீடர் என்ற நிலையில் அளிக்கப்பட்டது. இதுவே எழுதாக்கிளவி. (4) பதஞ்சலி முனிவர் - யோகா : அஷ்டாங்க - 8 அம்ச யோகா 1. இயமம் - நியமம் - வழிமுறைகள் 2. ஆசனம் - வெளி 3.பிராணாயமம் முதல் சமாதி வரை - உள் என்ற நிலையே அஷ்டாங்க யோகாவாகும். (5) பக்திமார்க்கம் : நம்பிக்கை வழி, அறியா பருவத்தில் குல தெய்வம், பண்பாட்டு கல்வி என்ற நிலையே பக்தி மார்க்கம். பிரம்மா - 4 முகம் கொண்டவர்,படைத்தார், காத்தார், அழித்தார் என்ற முப்பெரும் நிலை. (6) வேதம் - வேதாந்தம் ஆரியர்களின் வருகைக்கு பின்னரே (1) உபநிடதங்கள் - 108 (2) ருக் வேதம் (3) வியாசரின் வேத கருத்துகள் : . ருக் வேதம் - தோத்திரம் - தத்துவமசி . யஜூர் வேதம் - யாகம் - அகம் பிரம்மசி . சாம வேதம் - இசை - அய்னாம்ச பிரம்மசி . அதர்வணம் - மாந்திரீகம் - பிரக்ஞானம்பிரம்மம் (7) ஆரியர்களின் தெய்வ நிலை விளக்கம் : (1) ஆதிசங்கரர் : பிரம்ம சூத்திரம் - அத்வைதம் - தத்துவம் பல அல்ல, ஒன்றே தெய்வம். (2) ராமானுஜர் : துவைதம், தெய்வம் ஒன்று அல்ல, பல சிவன் - சக்தி ஒன்று அல்ல. (3) மத்துவர் : விசிஸ்டாத்வைதம் - தெய்வம் ஒன்று அல்ல மரம் ஒன்று தான் ஆனால் வேர், தண்டு, கிளை,பூ,காய் போல,தெய்வத்தின் பல நிலை. (8) சித்தர் : சித்தாந்தம் : சித்தர்கள் உயிரை உணர்ந்தவர்கள், அகநோக்கர்கள். (1) சத் சித் அனந்தம் (2) அறிவே தெய்வம் என்று தெய்வ நிலையை தெளிவு படுத்தியவர்கள் சித்தர்களே ஆவார்கள். எனவே, விஞ்ஞானம் - விண் வரை தான். மெய் ஞானம் பதஞ்சலி யோக,பக்தி மார்க்கம், வேதம் வியாசரின் வேத கருத்துக்கள், நான்கு தெய்வ வழிபாடு ஆகியவை இறை நிலையை சிறப்பாக தெளிவு படுத்தவில்லை. ராமானுஞர், மத்துவர்,வேறுப்பட்ட கருத்துக்கள், ஆதிசங்கரர்,பிரம்மசூத்திரத்தின் வாயிலாக அத்வைத தத்துவத்தை உணர்ந்தார், ஆனால் எல்லாரிடமும் அது போய் சேரவில்லை. சித்தர்கள் உயிரை உணர்ந்தார்கள், அதிலும் தேக்கமே. இந்த நிலையில், மேல் குறிப்பிட்ட அனைத்து கருத்துக்களையும், விஞ்ஞானிகளும், தத்துவ ஞானிகளும் அளித்த விளக்கங்களை,நிறைவு செய்து, அதற்குத் தக்க விளக்கம் விஞ்ஞானரீதியாக கொடுத்து, தெளிவுரையாக்கி, மக்கள் மத்தியில், கீழ்கண்டவாறு,எளிமைப்படுத்தியவர் 19-வது சித்தர் இறை விஞ்ஞானி அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி ஆவார். 1. விஞ்ஞானத்தின் தந்தையின் புவி ஈர்ப்பு விசை என்பது இறை நிலையின் இயல்பான அழுத்தமே. இறை நிலை 4 விதம் அல்ல, 4 தரம் கொண்டஒன்றே தெய்வம்-அறிவே தெய்வம் என்பதை தெளிவு படுத்தினார். 2. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐஸ்டின் கண்ட விண்ணுக்கு மூலம் இறைத்துகள் என்றும், அதற்கு மூலம் இறைநிலை என்றும் அவரது ஒரு நாணயத்தின் ஒரு பக்கம் என்ற நிலை, இரு நிலை என்றும் தெளிவு படுத்தினார். 3. ஆராயிரம் ஆண்டுகளூக்கு முன் தோன்றிய எழுதாக்கிளவி மெய் ஞானத்தையும் அதன் வாயிலாக, எழுத்து வடிவம், கொடுத்த பதஞ்சலி முனிவரின் 8 அம்ச யோகங்ககளையும், எளிய முறைப்படுத்தி, உள்ளார். . இயமம் மற்றும் நியமம் - இரண்டொழுக்கப் பண்பாடு. . ஆசனம் - எளிய முறை உடற் பயிற்சி . பிராணாயாமம் முதல் சமாதி வரை - ஆக்கினை, சாந்தி, துரியம், துரியாதீதம், என்ற நிலையை எளிமைப்படுத்தி, குண்டலினி யோகாவாக அறிமுகம் செய்துள்ளார். 4. ஆரியர்கள், வியாசர், ஆகியவர்களின் வேதங்களை . யஜுர்வேதம் - அகம்பிரம்மசி என்பதை அகத்தவம் என்ற நிலையில் தன் உயிரை, உணர, ஆக்கினை தீட்சை மூலம் எளிமைப் படுத்தியுள்ளார். . ருக் வேதம் - தத்துவமசி சாம வேதம் - அயனாம்ச பிரம்மசி இந்தக் கருத்துக்களை மிகவும் எளிய முறையில் நான் யார் என்ற தலைப்பில் ஒரு சிறிய கட்டுரை வாயிலாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள். . அதர்வண வேதம் - பிரக்ஞானம் பிரம்மம் என்ற உண்மை தத்துவத்தை - அறிவே தெய்வம் - சிந்திக்க வைக்கும் ஆறாவது அறிவு தான் மனம், தெய்வம்,அது தன்னகத்தே குண்டலினியில், கருமையத்தில், மையம் கொண்டுள்ளது. அகத்தவத்தால் உணரமுடியும் என்று லட்சோப லட்ச மக்களை உணர வைத்து,மெய் உணர்வாளர்களாக்கி உள்ளார். 5. ராமானுஜரின் துவைத தத்துவத்தை, சிவன் இன்றி சக்தி இல்லை. சீவ ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே. இறை நிலையின் இருப்பு நிலையும் இயக்க நிலையும் ஒன்றே என்பதை தெளிவுப்படுத்தி ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை உறுதிப் படுத்தி உள்ளார்கள். சித்தர்களின் - சித்தாந்தம் - சத் - சித் - அனந்தம் என்பது சிவனும் சக்தியும், இருப்பு நிலையும், இயக்க நிலையின் விளைவாக அனந்த கோடி தன்மாற்றம் என்பதை உணர்ந்து ஓதினார்கள். பக்தி மார்க்கதில் பிரம்மா நான்கு முகம்-படைத்தார்,அழித்தார்,காத்தார் என்ற தத்துவத்தை மறைமுகமாக நம்பிக்கையின் வாயிலாக தெளிவு படுத்துகிறார்கள்.இது இறை நிலையின் 4 தரம்,வற்றாயிருப்பு,பேறாற்றல்,பேரறிவு,காலம் என்ற விரைவு அறிவு வேகம், விவேகம் என்ற நிலையில் பக்தி மார்க்கத்திற்கும்,சித்தாந்தத்திற்கும் நமது ஆசான்,இறப்பிற்கு பின்னும்,பிறப்பிற்குமுன்னும் உயிரின் நிலையை,குறித்து மிகவும் தெளிவாக விளக்கிவுள்ளார்கள். ஆத்மாவிற்கு அழிவு என்பதே இல்லை. மறூபிறவி என்பதும் இல்லை. ஆண், பெண் விந்து நாதம் சேரும் இடத்தில் உயிர் அது கழியும் இடத்தில் மரணம் என்று குறிப்பிடுகிறார்கள். முன் பிறவி - பெற்றோர், பின் பிறவி பிள்ளைகள், என்பதை உண்மை என விஞ்ஞானரீதியாக தெளிவுபடுத்திகிறார்கள். இந்த நிலையில் விஞ்ஞானம், மெய்ஞானம், பக்திமார்க்க பதஞ்சலி யோகம், வியாசரின் வேத கருத்துக்கள்,ஆரியர்களான ராமானுஜர், மத்துவரின் தெய்வ நிலை விளக்கம் ஆகியவற்ரை நமது மகான் 19வது சித்தர் இறை விஞ்ஞானி அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் சுருக்கமாகவும்,மிகத் தெளிவாகவும், விஞ்ஞான ரீதியாக மூலத்தில் இருந்து ஞாலம் வரை ஒரே பிரயாணத்தில் தெளிவு படுத்தி முற்றுப்புள்ளி வைக்கிறார் என்றால் மிகையாகாது. இறை நிலை, வெளி, ஆதி அந்தம், தெய்வம், ஒன்றே இறை நிலை எல்லையற்றது. 4 தரம், வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு,காலம் கொண்டது. பிரித்து உணர முடியாதது. தொகுத்து உணரக் கூடிய விரைவு,அறிவு,வேகம், விவேகம் என்ற இறை நிலைக்கு, இயல்பாகவே அழுத்தம் , உந்து வேகம், தன்னிறுக்க சூழ்ந்தழுத்தம், காரணமாக, இறைத்துகள் (பரமாணு ), இறைத்துகள், கரைசல்,வான்-காந்தம் பொருள்படாத வான் காந்தம், இறை நிலை - பாய்ம நிலை, கோடிக்கணக்கான இறைத்துகள், கொத்து அமைப்பு, விண், விண் உள்ளே சிறைப்பட்டு இருக்கும் இறைத்துகள் வெளியேற்றும் போது, காந்தம் - பொருள் படும் காந்தம், மின் அணு, துணைக்கரு அணு, கரு அணு,கருந்துளை, இறை நிலையோடு இணையும் போது, 5 வித தன்மாற்றம், அழுத்தம், ஒலி, ஒளி,சுவை, மணம் ஆகும். இவையே திணிவு, வேகத்திற்கு ஏற்ப, காற்று, அழுத்தக் காற்று,நெருப்பு, நீர், நிலம், என்று பஞ்ச பூதங்களாக, தன்மாற்றம் பெறுகிறது. பஞ்சபூதங்களின் சேர்க்கை : 1. பருப்பொருள் - சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், உணர்வு அற்ற ஜடப்பொருள்கள் - அமைப்பு, துல்லியம், இயக்க ஒழுங்குப்படி செயல்படுகிறது. 2. உயிரினம், ஓர் அறிவு மூதல் 5 வரை, உயிரினம் - உணர்வுள்ளது - அமைப்பு, துல்லியம், இயக்க ஒழுங்கு+உணர்தல், துய்த்தல், பிரித்து உணர்தல், என்ற நிலையில் செயல்படுகிறது. 6 -ஆம் அறிவு படைத்த மனிதன், சடுதி தன்மாற்றத்தால், மனித இனம், (1) - அமைப்பு, துல்லியம், இயக்க ஒழுங்கு (2) - உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல் (3) - தன்னை அறிதல் - இறை நிலை, உணர்தல், முழுமைப்பேறு, பெறுதல், என்ற நிலை, என அனைத்து விஞ்ஞானி, மெய்ஞானிகளுக்கும் தெளிவு படுத்தியதொடு, ஆதிசங்கரரின் பிரம்மசூத்திரத்தை பாமர மக்களுக்கு போதித்து, அதை பிரம்மஞானம் என்னும் பிறப்பின் ரகசியம் என்றூ விளக்கி,பிரம்மஞான பட்டயம் அளித்து வருகிறார்கள். சித்தர்களின் சித்தாந்தத்தை உணர்ந்து ஓதுதலே அன்றி, ஓதி உணர்வது அல்ல என்ற விளக்கத்தை நிலை நாட்டினார். காஞ்சிவரம் மடாதிபதி கேட்ட கேள்விக்கு, நான் வேதங்களை படித்தது இல்லை,ஆனால் நான் என்னை வேதத்தின் உள் பொருளாய் கண்டேன் என்று பதிலளித்துள்ளார். மேலும் தான் பள்ளியில் படித்தது இல்லை. யுனிவர்சிட்டி ஆஃப் யூனிவர்ஸ் எனும் பிரபஞ்சபள்ளியில் படித்தேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். எனவே இதுவரை தோன்றிய விஞ்ஞானிகளும்,மெய்ஞானிகளும், சித்தர்களும், மற்றும் ஆரியர்களும், அவர்களின் கருத்துக்களை தெளிவுபடுத்தியும், நிறைவுபடுத்தியும், முழுமையான இறை நிலை தத்துவத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தி, லட்சோபலட்சம் மெய் உணர்வாளர்களை உருவாக்கியது மட்டுமின்றி , கல்லூரி, பல்கலைக்கழகங்களில், டிப்ளமோ, B,A., M.A., வரை நிறைவு பெற்று, எம்.பில். பி.எச்.டி.,ஆரம்பமாகும் நிலையில் உள்ளது. இறை நிலையின் தன்மாற்ற நிகழ்ச்சியே அனைத்துமாக மலர்ந்து, வாழ்ந்து, இறை நிலையிலேயே மடிந்து விடுகிறது என்ற பிரபஞ்ச இரகசியத்தை தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள். இந்த ரகசியத்தை ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இருபாலரும், பருவம் அடைந்த பின் பள்ளி பருவத்தில் படித்து உணர்ந்தால்,உலகை திருத்த, புதியதொரு மகான் தோன்ற தேவை இல்லை. பிறக்கும் அனைவரும் கருவில் திருவுடையார் என்ற நிலையில் ஞானக்குழந்தையாக, மகானாக, பிறப்பார்கள் என்பது உண்மை. இந்த நிலை அடைய எளிய முறை குண்டலினி யோகா பயிற்சி மட்டுமே போதுமானது என்றால் அது மிகையாகாது. எளிய முறை குண்டலினி யோகப்பயிற்சி : 1)உடலுக்கு - உடற் பயிற்சி 2)உயிருக்கு - காயகல்ப பயிற்சி 3)மனதிற்கு - யோகப் பயிற்சி( தியானப் பயிற்சி ) 1.அகத்தவம் 2.அகத்தாய்வு 3.குண நலப் பேறு 4.முழுமைப் பேறு இந்த பயிற்சியை ஆண்,பெண்,இருபாலரும்,8 வயதுக்கு மேற்பட்டவர்,எந்த தேசத்தில் உள்ளவர்களும்,கற்று,தன்னை அறிந்து இறை நிலை உணர்ந்து தானும் மகானாக,திகழலாம் என்ற நிலையை,உருவாக்கியவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள். பிரம்மசூத்திரத்தையும்,சித்தாந்தத்தையும்,பதஞ்சலியோக சூத்திரத்தையும்,எளிய முறை படுத்தி,அனைவரும் உணரும் நிலையில் எளிய முறை குண்டலினி யோகாவை,அறிமுகப்படுத்திய நிகரில்லா,எல்லாம் வல்ல,நமது மகானை, 19-வது சித்தர் இறை விஞ்ஞானி அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி என்று அன்புடன் அழை த்து கெளரவப்படுத்துவோம் என்று சமர்ப்பனம். நன்றி! வணக்கம் ! வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.. !! இப்படிக்கு, L.A.S ஜெயராஜ் (9841114953 ,9710393936) 19-வது சித்தர் இறை விஞ்ஞானி அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் அன்புத் தொண்டன்.
Posted by: mohanasundari on 21 Feb. 2010

Back to Article
MEMBER AREA
Username:
Password:
Remember my password on this computer
INTERACTIVE FEATURES
 
©Copyright 2000-2013 Life Positive Foundation
  HOME | SUBSCRIBE | WALLPAPERS | ADVERTISING | POLICY | PRACTITIONERS | WRITERS | PEOPLE | ABOUT | CONTACT